Wednesday, June 7, 2017

Current Affairs June 3-5

சண்முகம் IAS அகாடமி 

நடப்பு நிகழ்வுகள் 

  1. இந்திய வம்சாவளியான லியோ வரட்கர் அயர்லாந்தின் அடுத்த பிரதம மந்திரி.
  2. சந்தை ஒழுங்குமுறை நிறுவனமான செபி, உதய் கோட்டக் தலைமையின் கீழ் கார்ப்பரேட் கவர்னன்ஸ் மீது ஒரு குழுவை அமைத்துள்ளது
  3. பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரியாக சஷி ஷேகர் வேம்படி நியமிக்கப்பட்டார்.
  4. சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் (International Table Tennis Federation) நடுவர் குழுவின் (URC) உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் - கணேஷன் நீலகண்ட ஐயர்
  5. இந்திய ரிசர்வ் வங்கி கணேஷ் குமாரை நிர்வாக இயக்குனராக நியமித்துள்ளது
  6. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட், ரக்ஷா மந்திரி விருதை பெற்றது .
  7. இந்தியாவின் நிதின் குமார் சின்ஹா HCL ஆசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
  8. ஆந்திராவின் விழிணகரம் கிராமம் MGNREGA தேசிய விருதை பெற்றது
  9. நியூட்ரான் நட்சத்திரங்களைப் ஆராய்வதற்காக உலகில் முதன்முறையாக விண்கலம் அமைத்தது நாசா.
  10. ஒன்றுமறியாத குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கு எதிரான சர்வதேச தினம் - ஜூன் 4
  11. இந்தியா முதன்முறையாக அனைத்து வானிலையையும் தாங்கும் தரையிலிருந்து விண்ணை நோக்கி தாக்கும் ஏவுகணையை (QR-SAM) ஒடிசா சந்திபூரில் வெற்றிகரமாக சோதனை செய்தது.
  12. தாய்லாந்து கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் பேட்மின்டன் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சாய் பிரனீத் வெற்றி பெற்றார் .
  13. மேரி மீக்கர் நிறுவனம், இந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இணையதளச் செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்மூலம் ஃபேஸ்புக் செயலியை விட ட்ரூ காலர் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் வாட்ஸ்அப் முதலிடத்தில் உள்ளது.
  14. உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 , 2017 உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் மையக்கருத்து - இயற்கை மக்களை இணைக்கிறது.
  15. கழிவுகளை பிரித்தெடுத்து சேகரிக்கும் வாகனங்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தொடக்கி வைத்தார் .
  16. 21 வது ஃபெடரர் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் சுதா சிங் தங்கப் பதக்கம் வென்றார்
  17. ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லா உறுப்பினர்களாக கோட் டி ஐவோயர், ஈக்வடோரியல் கினியா, குவைத், போலந்து மற்றும் பெரு ஆகிய நாடுகளை பொதுச்சபை தேர்ந்தெடுத்துள்ளது
  18. உலக போட்டித்திறன் பட்டியலில் இந்தியா 45 வது இடத்தில் உள்ளது
  19. உலகளாவிய சில்லறை வர்த்தக முன்னேற்ற பட்டியலில் இந்தியா முதலிடம்
  20. செயற்கை மேகங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தை நாசா அறிமுகப்படுத்துகிறது.
  21. உலக வங்கி 2017 ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி வீதம் 7 .2 சதவீதமென கணித்துள்ளது.
  22. Solar Comet என்று அழைக்கப்படும் சூரிய ஒளி பஸ் புது தில்லியில் 20 நாள் பயணம் தொடங்கியது.
  23. மகாராஷ்டிராவில் மும்பை-கோவா நெடுஞ்சாலையில் சாஹித் ஆற்றின் மீது புதிய பாலத்தை அமைச்சர் நிதின் கட்காரி திறந்து வைத்தார் .
  24. இந்தியாவின் முதல் கிராம தெரு விளக்குகளில் LED பல்புகளை பயன்படுத்தும் திட்டத்தை ஆந்திர மாநிலத்தில் செயல்படுத்த உள்ளது மத்திய அரசு .
  25. 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் 19.12 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
  26. எஸ்.பி.ஐ மற்றும் உலக வங்கி இணைந்து சோலார் திட்டங்களுக்கு ரூ.400 கோடி கடன் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
  27. இந்திய ராக்கெட் வரலாற்றில் மிக அதிகளவு எடையை சுமந்து விண்ணில் பாயும் ஏவுகணை என்ற பெருமையை ஜிஎஸ்எல்வி எம்கே 3 டி1 ராக்கெட் பெறற்றுள்ளது. இந்த ராக்கெட் ஜிசாட் 19 என்ற 3136 கிலோ எடை கொண்ட இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோளை தாங்கிச் சென்றது. இதன் மூலம் இந்தியாவின் இணையதள வேகத்தையும் மிக அதிக அளவில் உயர்த்துவதுடன், விண்ணிற்கு மனிதர்களையும் அனுப்ப முடியும்.
  28. கர்நாடக மாநிலம் மைசூருவில் முதலமைச்சர் சித்தராமையா டிரின் டிரின் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  29. ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் குழு என்ற பெருமையை பெறுகிறது. ஸ்னோ லைன் (இந்தியா )
  30. அமெரிக்காவில் நடந்த ஆங்கில சொற்களில் உள்ள பிழையை நீக்கும் போட்டி நடந்தது. இதில் இந்திய வம்சாவளியை சார்ந்த அனன்யா வினய் என்ற 12 வயது சிறுமி முதலிடத்தை பிடித்துள்ளார்.
  31. உலகின் 31% ஏழைக் குழந்தைகள் வசிக்கும் நாடு இந்தியா என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
  32. முதல் முறையாக தனியார் நிறுவனம் ஒன்று தனது மூன் எக்ஸ்பிரஸ் (MoonEx) என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்ப உள்ளது.
  33. தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறி, கத்தார் நாட்டுடன் தங்கள் உறவை முடித்துக் கொள்வதாக சவுதி, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து அறிவித்துள்ளன.


              மேலும் படிக்க http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/