சண்முகம் IAS அகாடமி
நடப்பு நிகழ்வுகள்
- இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் சிங்கப்பூரில் நடந்த ஐடிஎப் ஆண்கள் பியூச்சர் டென்னிஸ் பட்டத்தை வென்றார்.
- விஜயா வங்கி 100 டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது
- நாட்டின் நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்ய தெற்கு அந்தமானில் உள்ள ரூட்லண்ட் தீவுக்கு தேசிய வனவிலங்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வடகிழக்கு மாநிலங்களுக்கான "மலைப்பகுதி மேம்பாட்டு திட்டம்" அறிவித்தார் .
- 'பாகுபலி' திரைப்படத்தின் மூலம் சர்வதேச புகழ்பெற்ற பிரபாஸ் தற்போது ஜியோனி மொபைல்போன் நிறுவனத்தின் தூதராக ஒப்பந்தமாகியுள்ளார்.
- பிரபஞ்சத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களை விட வெப்பமான மற்றும் பூமியில் இருந்து 650 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள மிக வெப்பமான கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.
- நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் டீயுபா நான்காவது முறையாக நேபாளின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் .
- அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 500 கிராமங்களை இந்தியாவில் தத்தெடுக்கின்றனர்.
- கடந்த 10 ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்த மத்திய அரசு நியாய மித்ரா எனும் நீதிமன்றம் நாடு முழுவதும் நிறுவ தீர்மானித்துள்ளது.
- ஹரியானா ஸ்வராஜ் ஜெயந்தி யோஜனாவின் கீழ் நுரையீரல் காஞ்சுகேட் தடுப்பூசி (Pneumococcal Conjugate Vaccine) அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
- சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா \"வாழ்க்கையை பாதுகாக்க வாழ்வுக்கான திறன்\"( Skill for Life, Save a Life ) எனும் திட்டத்தை தில்லியில் துவக்கினார்.
- ஸ்ரீலங்காவின் இரயில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக 318 மில்லியன் டாலர் கடனாக இந்தியா வழங்குகிறது.
- உத்திர பிரதேச மாநிலம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து NCERT புத்தகங்கள் வழங்க உள்ளது
- கேரள மாநில அரசு, கல்யாண வீடுகளில் எளிதில் மட்க கூடிய இயற்க்கையான பொருட்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
- குழந்தைகளின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு என்ற ஐ.நா. விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு உறுப்பினராக சச்சின் இணைந்தார் .
- ஹோஷிர் சிங் பதிப்புரிமை அலுவலகத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாண்டினீக்ரோ நேட்டோவின் 29 வது உறுப்பினராக இணைந்தது .
- ஒற்றை மகளிர் ஓய்வூதியத் திட்டம் தெலங்கானா அறிமுகப்படுத்தியது.
- ஐசிஐசிஐ வங்கி கடந்த ஒரு வருடத்தில் 200 சூரிய ஆற்றல் ஏடிஎம் தளங்களை அமைத்துள்ளது
- பிரபல எழுத்தாளர் ஆனந்த நீலகந்தன், ஓடியா கவிஞர் ஹரபிரசாத் தாஸ் மற்றும் எழுத்தாளர் பரமிதா சத்பதி ஆகியோர் கலிங்க இலக்கிய விருதுக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்.
- \'Ministry of Utmost Happiness\' என்ற நூலை அருந்ததி ராய் எழுதினார்.
- ஐக்கிய நாடுகளின் முதல் உலக சமுத்திர மாநாடு அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறுகிறது.
- பிரதம மந்திரி நரேந்திர மோடி டெல்லி ஐ.ஐ.டி யில் ஸ்பிக்கு மேகாயின்(SPIC MACAY) 5 வது சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
- 2017 ஆம் ஆண்டு IMD உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசையில் 63 நாடுகளில் இந்தியா 51 வது இடத்தில் உள்ளது.
- UNCTAD இன் உலக முதலீட்டு அறிக்கை 2017 படி, இந்தியா தொடர்ந்து அந்நிய நேரடி முதலீட்டிற்கான விருப்பமான நாடாகவே இருந்து வருகிறது .இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள் அமெரிக்கா, சீனா, இந்தியா.
மேலும் படிக்கச் http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/