Monday, March 31, 2014

68 இபிஎப் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு

தொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்ஓ) 68 தனியார் பி.எப். அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு சலுகை அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூட்டியிருந்த இந்தக் கூட்டத்தில் இம்மாதம் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும் அறக்கட்டளைகளுக்கு மட்டுமே இந்த வரி விலக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற வரி விலக்கு பெற வேண்டிய அறக்கட்டளைகள் தங்களது பதிவை இம்மாதம் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று முன்னரே காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
பி.எப். அறக்கட்டளைகளுக்கு வழக்கமான வருமான வரி விலக்கு அளிப்பதற்கு அனுமதி வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் இந்த 68 அறக்கட்டளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக அதன் தலைவர் கே.கே. ஜலான் தெரிவித்தார். இ.பி.எப்.ஓ. அமைப்பின் அதிகாரம் அளிக்கப்பட்ட குழுதான் இ.பி.எப். அமைப்பின் உயர் அமைப்பாகும். இந்தக் குழுவுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார். இருப்பினும் வரி விலக்கு தரும் முடிவை இந்தக் குழு கடந்த ஜனவரி 13-ம் தேதி எடுத்து ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.
அடுத்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட நிறுவனங்களில் எவற்றுக்கு அனுமதி வழங்குவது என்பது முடிவு செய்யப்படும் என்று ஜலான் கூறினார்.
தனியார் பி.எப். அறக்கட் டளைகள் என்பது சில நிறுவனங்களால் நிர்வகிக்கப் படுவதாகும். இவை தங்களது ஊழியர்களிடமிருந்து பணத்தை பிடித்தம் செய்து அதை நிர்வகிக்கும். அதற்குரிய வருமான வரி விலக்கைக் கோரும். இந்த அறக்கட்டளைகளில் உள்ள உறுப்பினர்களுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும்.