Friday, March 7, 2014

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச குத்துச்சண்டை சங்கம்.

இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஏற்கனவே சஸ்பென்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், இப்போது அதன் அங்கீகாரத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது சர்வதேச குத்துச்சண்டை சங்கம். இது தொடர்பாக அதன் தலைவர் ஜிங் கு ஊ கூறியிருப்பதாவது:
இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தில் தற்போதுள்ள நிர்வாகிகள் குத்துச்சண்டையின் புகழையும், மரியாதையையும் அழித்துவிட்டனர். இந்திய குத்துச்சண்டை சம்மேளன விவகாரத்தில் பல்வேறு தரப்பில் இருந்து எங்களுக்கு முரண்பட்ட தகவல் கிடைத்துள்ளது. அதனால் இந்த பிரச்சினையை கையாள்வது தொடர்பாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.
அதேநேரத்தில் இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சர்வதேச சங்கத்தின் கொடியின் கீழ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம். இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு மறுதேர்தல் நடத்தும் வரை மீண்டும் அங்கீகாரத்தைப் பெற முடியாது என தெரிவித்துள்ளார்.